தனிநபர் நடமாட்டச் சாதனம்; 2020 காலக்கெடு பரிசீலனை

தனிநபர் நடமாட்டச் சாதனம்; 2020 காலக்கெடு பரிசீலனை

1 mins read

அண்மையில் தனிநபர் நடமாட்டச் சாதனம் தொடர்பான தீ விபத்துகள் நிகழ்ந்ததால் 2020ஆம் ஆண்டு இறுதிக்குள் பாதுகாப்புச் சான்றிதழ் பெற வேண்டும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டது. இல்லையெனில் பொதுப் பாதையில் தனிநபர் நடமாட்டச் சாதனம் பயன் படுத்துவதற்குத் தடை விதிக்கப்படும் என்று ஆணையம் கூறியிருந்தது. இந்த நிலையில் காலக்கெடுவை முன்னரே கொண்டு வருவதைப் பற்றி ஆணையம் பரிசீலித்து வருகிறது. தற்போது 'யுஎல்2272' அல்லாத சான்றிதழ் பெற்ற தனிநபர் நடமாட்டச் சாதன ஓட்டுநர்கள் 2020 டிசம்பர் 31ஆம் தேதி வரை பொதுமக்களுக்கான பாதையைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளனர்.