கரையோரப் பூங்காவில் மிளிரும் சிங்கப்பூர் கலாசாரம்

கரையோரப் பூங்காவில் மிளிரும் சிங்கப்பூர் கலாசாரம்

1 mins read
35091104-d975-4e78-9069-a73850c0956e
தேசிய நாளையொட்டி சிங்கப்பூர்க் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட கரையோரப் பூந்தோட்டம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரின் கரையோரப் பூங்காவில் வடிவமைக்கப்பட்டுள்ள மாபெரும் விளையாட்டுத் திடல் எண்பதுகளின் குழந்தைப் பருவத்தை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது என்கிறார் உள்ளூர் வடிவமைப்புக் கலைஞர் யாங் டெரோங்.

தேசிய நாள் கொண்டாட்டத்தையொட்டி உருவாக்கப்பட்டுள்ளது கரையோரப்பூங்கா விளையாட்டுத் திடல். இந்த ஆண்டு தேசிய நாளுக்கான வடிவமைப்புக் கலைக்கு இயக்குநரான திரு யாங், கரையோரப் பூங்காவின் மலர் அலங்காரத்தை கண்ணைக் கவரும் வகையில் அமைத்துள்ளார்.

சிங்கப்பூரின் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் வண்ணங்கள், மனிதக் குரங்கு ஆ மெங், ஐஸ் கச்சாங் கிண்ணம், வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள் போன்றவற்றை 15,000க்கு மேற்பட்ட 80 வகையான ஆர்க்கெட் மலர்களுக்கு இடையே வடிவமைத்துள்ளார்.

தேசிய நாள் கொண்டாட்டத்தைப் பிரதிபலிக்கும் இந்தத் தோட்டம் இன்று முதல் செப்டம்பர் 15ஆம் தேதி பொதுமக்கள் பார்வைக்குத் திறந்துவிடப்படும்.

வழக்கமாக சங்நீலா உத்தமாவைப் பற்றி பேசுவதற்குப் பதிலாக இந்த முறை நமது ஆர்கெட் பண்பாட்டைப் பற்றிப் பேசுவோம் என்று கூறியுள்ளார் வடிவமைப்பாளர் யாங். சிறுவர் முதல் 100 வயது முதியவர் வரையிலான சமகாலச் சூழலை இந்த வடிவமைப்பு பிரதிபலித்தாலும் இதுவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றார் திரு யாங்.

தேசிய நாள் கொண்டாட்டத்தையொட்டி உள்ளூர்க் கலைஞர்களான கிட் சான், ரஹிமா ரஹிம் மற்றும் குமார் பங்குபெறும் கலைநிகழ்ச்சிகளும் இங்கு நடைபெறவுள்ளன. அனுமதி இலவசம்.