முதியோர்களைக் கொடுமைப் படுத்தும் சம்பவங்கள் அதிகரிப்பு

முதியோர்களைக் கொடுமைப் படுத்தும் சம்பவங்கள் அதிகரிப்பு

1 mins read
f55d808a-d952-428d-9fab-29c17d976102
80 விழுக்காடு முதியவர்கள் தங்கள் பிள்ளைகளாலும், உறவினர்களாலும், கணவன் அல்லது மனைவியாலுமே கொடுமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

முதியோர்களைக் கொடுமைப்படுத்தும் சம்பவங்கள் கடந்த ஈராண்டில் இரட்டிப்பாகி உள்ளது என சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டில் இதுபோன்ற 55 சம்பவங்கள் குறித்து அமைச்சுக்குப் புகார் அளிக்கப்பட்டது.

2017ஆம் ஆண்டில் அந்தப் புகார்கள் 77 ஆகவும் கடந்த ஆண்டில் 126 ஆகவும் உயர்ந்துள்ளது. முதியவர்கள் கொடுமைப்படுத்தப்படும் சம்பவங்களில் உடல் ரீதியாக அவர்களைத் துன்புறுத்துவதுடன் அவர்களின் மனம் புண்படும்படி உதாசீனப்படுத்துதல், பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவது, பிள்ளைகளால் புறக்கணிக்கப்படுவது போன்ற செயல்களும் அடங்கும்.

முதியவர்கள் துன்புறுத்தப்படும் சம்பவங்களில் அவர்களுக்கு சிராய்ப்புகள், தழும்புகள், இடும்பு எலும்பு முறிவு, கவனிப்பாரற்ற நிலையில் படுத்த படுக்கையாய் கிடப்பவர்களுக்கு படுக்கைப் புண்கள் போன்றவை ஏற்படுவது தெரியவந்துள்ளது. 80 விழுக்காடு முதியவர்கள் தங்கள் பிள்ளைகளாலும், உறவினர்களாலும், கணவன் அல்லது மனைவியாலுமே கொடுமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.