தொழிற்துறை சொத்துச் சந்தையில் முன்னேற்றம்

தொழிற்துறை சொத்துச் சந்தையில் முன்னேற்றம்

1 mins read
bb9250cf-d933-4bd9-9e8d-747656f0a682
தொழிற்துறை சொத்துச் சந்தையில் சொந்தமாக இடம் வாங்கி அல்லது வாடகைக்கு எடுத்து தொழில் புரிவோர் எண்ணிக்கை 0.6 விழுக்காடு உயர்ந்து 89.3 விழுக்காடாகியுள்ளது. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தொழிற் கூடங்களுக்கான இடங்களின் வாடகையும் விலையும் கடந்த இரண்டாம் காலாண்டில் எவ்வித ஏற்ற இறக்கமின்றி நிலையாக உள்ளது என ஜூரோங் டவுன் கார்ப்பரே‌ஷன் (ஜேடிசி) வெளியிட்ட அறிக்கையில் தெரிய வந்துள்ளது. முந்தைய காலாண்டில் 0.1 விழுக்காடு சரிந்திருந்த வாடகைக் குறியீடு இந்த காலாண்டில் 0.1 விழுக்காடு உயர்ந்துள்ளது.

ஓராண்டுக்கு முந்தைய நிலையுடன் ஒப்பிடுகையில் வாடகைக் குறியீட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என ஜேடிசியின் அறிக்கையின் மூலம் தெரிகிறது. தொழிற்துறை சொத்துச் சந்தையில் சொந்தமாக இடம் வாங்கி அல்லது வாடகைக்கு எடுத்து தொழில் புரிவோர் எண்ணிக்கை 0.6 விழுக்காடு உயர்ந்து 89.3 விழுக்காடாகியுள்ளது.