முன்னாள் சமூக ஊழியர் மீது புதிய குற்றச்சாட்டு

முன்னாள் சமூக ஊழியர் மீது புதிய குற்றச்சாட்டு

1 mins read
c27ba111-5106-4f95-8608-b577df43940e
47,000 வெள்ளிக்கு மேல் கையாடியதாகக் கூறப்படும் முன்னாள் சமூக ஊழியர் ஜோனி சோங் சியாங் சியாங், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ள முன்வந்துள்ளார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

இரண்டு முதியோர் இல்ல வங்கிக் கணக்கிலிருந்து 47,000 வெள்ளிக்கு மேல் கையாடியதாகக் கூறப்படும் முன்னாள் சமூக ஊழியர் ஜோனி சோங் சியாங் சியாங் மீது புதிய குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஏழு பேரை ஏமாற்றி மேலும் 4,200 வெள்ளியை அவர் எடுத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கான ஓய்வூதிய உதவித் திட்டமான மத்திய சேம நிதியின் சில்வர் ஆதரவு திட்டத்தின் கீழ் பெற்ற காசோலைகளை உரியவர்களிடம் ஒப்படைக்காமல் தனது பெயரில் காசாக மாற்றிக் கொண்டார்.

இந்த நிலையில் இந்தக் குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொள்ள ஜோனி சோங் சியாங் சியாங் முன்வந்துள்ளார்.