நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழக விடுதியிலேயே பீர் தயாரித்து விற்ற மூன்று மாணவர்கள் பட்டப்படிப்பை முடித்த பிறகு மீண்டும் 'பீர்' தயாரிப்பில் இறங்க முடிவு செய்துள்ளனர்.
கல்லூரி விடுதியில் விதி முறைகளை மீறி 'பீர்' தயாரித்த அவர்களுக்கு நிர்வாகம் தடை விதித்தது.
இதையடுத்து அவர்களுடைய 'பீர்' தயாரிக்கும் முயற்சி பாதியில் நின்றது.
இருந்தாலும் கடந்த வெள்ளிக் கிழமை பட்டம் பெற்ற சிங்கப்பூரர்களான அபிலாஷ் சுப்ரமனும் ஹிடேஷ் அல்வானியும் முழுநேர 'பீர்' தயாரிப்பில் கவனம் செலுத்த போவதாக தெரிவித்துள்ளனர்.
மூன்றாவது மாணவரான ராஹுல் இம்மான்திராவுக்கு கடைசி கல்வி பருவத்தை முடிக்க வேண்டியுள்ளது. மூன்று மாணவர்களுக்கும் வயது 26. மூவரும் பொறியியல் மாணவர்கள்.
கடந்த எட்டு மாதங்களாக அவர்களுடைய தயாரிப்பு முறையை அடிப்படையாகக் கொண்டு உரிமம் பெற்ற நிறுவனம் ஒன்று பீர் தயாரித்து வருகிறது.
தற்போது 'இந்தியா பாலே லேகர்', ஜெர்மன் அல்ட்பியர், 'பிரெஞ்சு சாய்சன்' ஆகிய மூன்று சுவைகளில் பீர் தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் புதிய சுவைகளைச் சேரக்க விரும்புவதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

