சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக படகு மூலம் நுழைந்த நால்வரை கடலோரக் காவல்படையினர் கைது செய்துள்ளனர்.
அவர்களிடமிருந்து சுங்கவரி செலுத்தப்படாத சிகரெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்கள் 18 முதல் 63 வயது வரையிலானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
சென்ற வியாழக்கிழமை பின்னிரவு ஒரு மணி அளவில் சிங்கப்பூர் கடற்பகுதியில் நால்வரும் படகில் வருவதை கடலோரக் காவல்படை கண்டுபிடித்தது.
உடனே அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டதாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் கடலோரக் காவல்படை தெரிவித்தது.
படகை சோதனையிட்டதில் சுங்கவரி செலுத்தப்படாத சிகரெட்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல் படை தெரிவித்தது.

