ஆளுமையை மக்கள் செயல் கட்சி நெறி தவறாது மிகுந்த சிரத்தையுடன் செயல்படுத்தி வருகிறது என்றும் சிங்கப்பூரர்களின் வாழ்க்கையை மேம்படுத்த கடுமையாக உழைத்து வருகிறது என்றும் இவற்றை அது தொடர்ந்து செய்து வந்திருக்கிறது என்பதற்கு ஆதாரங்கள் உண்டு என்றும் தெரிவித்துள்ளார் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்.
ஆளும் மக்கள் செயல் கட்சி தனது பாதையைத் தவற விட்டு விட்டது என்று சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தலைமைச் செயலாளர் டாக்டர் டான் செங் போக் நேற்று முன்தினம் கூறியதை திரு ஹெங் மறுத்தார்.
கடுமையான விவகாரங்களைச் சமாளித்தல்; பொருளியல் மறுசீரமைக்கப்பட்டு வரும் வேளையில் மக்களுக்காக வேலைகளை உருவாக்குதல், மூப்படைந்து வரும் மக்கள் தொகையைக் கவனித்துக்கொள்ளுதல் போன்ற பெரிய சவால்களை எதிர்கொள்ளவும் அமைச்சர்கள் ஒரு குழுவாக அணுக்கமாகச் செயல்பட்டு வந்திருக்கிறார்கள் என்றும் விவரித்தார் நிதி அமைச்சருமான திரு ஹெங்.
"டாக்டர் டான் கூறியிருப்பவற்றை நாங்கள் மறுக்கிறோம். அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் உள்ளது போலவே அவருக்கும் கருத்துக் கூற அதிகாரம் உண்டு," என்று கூறிய திரு ஹெங், பிடோக் தொகுதிக்கு நேற்று மேற்கொண்ட வருகைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசினார்.
"அரசாங்கத்தின் கொள்கைகளுக்குத் தங்களின் ஆதரவு பற்றியும் அரசாங்கத்தின் கொள்கைகள் தங்கள் வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்தி உள்ளது என்பது பற்றியும் குடியிருப்பாளர்கள் பலர் என்னிடம் தெரிவித்தனர்," என்றும் அவர் விளக்கினார்.
மக்கள் செயல் கட்சியின் நான்காம் தலைமுறைத் தலைவர்கள் தொகுதிச் சுற்றுலா மேற்கொள்ளும் தொடர் நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக நேற்று திரு ஹெங்குடன் வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங்கும் சென்றிருந்தார்.
"சில சந்தர்ப்பங்களில் டாக்டர் டான் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார். அரசாங்கத்திடம் வெளிப்படைத்தன்மை இல்லை என்று கூறும் அவர் ஆக்ஸ்லி ரோடு விவகாரம் ஏன் நாடாளுமன்றத்தில் பேசப்பட வேண்டும் என்றும் கேட்கிறார்.
"அதுதான் வெளிப்படைத்தன்மை. இந்த விவகாரம் தொடர்
பில் ஒளிவுமறைவு இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் பிரதமர் லீ, அதை நாடாளுமன்ற விவாதத்துக்குக்கொண்டு சென்று, அதற்கான விளக்கத்தையும் நாடாளுமன்றத்தில் கொடுத்தார். இதுதான் எங்கள் ஆளுமைத்தன்மையின் முக்கிய அம்சம்," என்றும் துணைப் பிரதமர் வலியுறுத்தினார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் முறை தொடர்பான முக்கியமான கேள்விகளுக்கு நாடாளுமன்றம் இதுவரை பதிலளிக்கவில்லை. ஆனால், 'ஒரு குடும்ப விவகாரத்தை' நாடாளுமன்றத்தில் பேசியுள்ளது," என்று டாக்டர் டான் நேற்று முன்தினம் கூறியிருந்தார்.
"எங்கள் சாதனை நீண்டகால மாக நிலைத்திருக்கும். புதிய கட்சி முளைத்தாலும் எங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் இருக்காது. நாங்கள் அரசாங்கத்தில் இருக்கும் வரை சிங்கப்பூருக்கும் சிங்கப்பூரருக்கும் எங்கள் கடப்பாட்டைத் தொடர்ந்து வெளிப்படுத்திக்கொண்டிருப்போம்," என்று வர்த்தக, தொழில் அமைச்சர் சான், மக்கள் செயல் கட்சியின் செயல்பாடு பற்றி கருத்துரைத்தார்.
சிங்-கப்-பூ-ரர்-கள் நியா-யத்-தைக் கடைப்-பி-டிப்-ப-வர்-கள் என்-றும் யார் மீது நம்-பிக்கை வைக்-க-லாம் என்-பது பற்றி அவர்-க-ளுக்-குத் தெரி-யும் என்-றும் இரு அமைச்-சர்-களும் தெரி-வித்-த-னர்.
பிடோக் தொகு-திக்-குப் பொறுப்பு வகிக்-கும் நாடா-ளு-மன்ற உறுப்-பி-ன-ரான திரு லிம் சுவீ சே வழி-ந-டத்-திய தொகு-திச் சுற்-று-லா-வின்-போது, இரு அமைச்-சர்-களும் குடி-யி-ருப்-பா-ளர்-க-ளி-ட-மும் நியூ அப்பர் சாங்கி சாலையில் உள்ள சந்தை, உண வங்காடி நிலையக் கடை உரி-மை-யா-ளர்-க-ளி-ட-மும் உரை-யாடினார்கள்.

