ஜெம் கடைத்தொகுதியின் ஹுவாவெய் கடையில் பிரச்சினை செய்ததற்காக 53 வயது மாதை நேற்று முன்தினம் போலிசார் கைது செய்துள்ளனர்.
தேசிய தினத்தை முன்னிட்டு $198 விலை மதிப்புள்ள Y6 Pro வகை கைபேசி 50 வயதுக்கு மேற்பட்ட சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தவாசிகளுக்கும் $54க்கு சிறப்பு விலையில் விற்கப்படும் என்று ஹுவாவெய் நிறுவனம் அறிவித்திருந்ததைத் தொடர்ந்து நேற்று முன்தினம் ஹுவாவெய் கடைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.
கடைக்காரர் கைபேசி வாங் குவதற்கான சீட்டைத் தராததால் கைபேசியை வாங்க முடியவில்லை என்று அம்மாது ஆர்ப்பாட்டம் செய்ததால் கைது செய்யப்பட்டார்.

