சிறப்பு நாணயங்களை அறிமுகம் செய்த இஸ்தானா

சிறப்பு நாணயங்களை அறிமுகம் செய்த இஸ்தானா

1 mins read
ec0ce16e-ebeb-4444-901b-a105354727b2
நான்கு நாணயங்கள் அடங்கிய இந்த சிறப்புத் தொகுப்பு அறிமுகம் கண்டுள்ளது. படம்: சிங்கப்பூர் நாணய ஆலை -

இஸ்தானாவின் வளமான உயிரின, தாவர வகைகளைக் கொண்டாடும் விதமாக நேற்றிலிருந்து நான்கு வகை நினைவு நாணயங்களைப் பொதுமக்கள் வாங்கலாம்.நான்கு நாணயங்கள் அடங்கிய ஒரு சிறப்புத் தொகுப்பில் உள்ள இரு நாணயங்களில் 'ஹார்ன்பில்' பறவையும் 'பார்ன்' வகை ஆந்தையும் வண்ண உருவங்களாக இடம்பெற்றுள்ளதாக சிங்கப்பூர் நாணய ஆலை தெரிவித்தது.

இஸ்தானா திடலில் நேற்று நடைபெற்ற தேசிய தின வரவேற்பு நிகழ்ச்சியில் 100 சிறப்பு நாணயத் தொகுப்புகள் மட்டும் கிடைக்கப் பெற்றன.

இந்தத் தொகுப்பில் உள்ள மற்ற இரண்டு நாணயங்களில், சிங்கப்பூரின் தேசிய மலரான 'வாண்டா மிஸ் ஜோக்கிம்' ஆர்க்கிட் மலரும் இஸ்தானாவின் அன்னப் பறவைகளும் இடம்பெறுகின்றன. அவற்றைத் தனித்தனியாக வாங்க முடியும். அவற்றில் தலா 300 நாணயங்கள் நேற்று விற்பனைக்கு வைக்கப்பட்டன.

அனைத்து நாணயத் தொகுப்புகளிலும் அவற்றின் பின்னால் இஸ்தானாவின் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும்.

சிங்கப்பூர் நாணய ஆலை, சில்லறைக் கடைகளில் இந்த நாணயத் தொகுப்புகள் இன்று முதல் கிடைக்கும். இவற்றை இணையம் மூலமாக வாங்கிக்கொள்ளலாம்.

நாணயத் தொகுப்பு ஒன்றின் விலை $440. 'வாண்டா மிஸ் ஜோக்கிம்' அல்லது இஸ்தானா அன்னப் பறவைகளைக் கொண்ட நாணயம் ஒவ்வொன்றின் விலை $110.

இவற்றின் விற்பனை மூலம் திரட்டப்படும் தொகையின் ஒரு பகுதி 'அதிபர் சவால்' நிதிக்கு நன்கொடையாக வழங்கப்படும் என்று சிங்கப்பூர் நாணய ஆலையின் இயக்குநர் யிப் பாக் லிங் தெரிவித்தார்.