பூன்லே வட்டாரத்தின் வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக் ஒன்றின் வெற்றுத்தளத்தில் நேற்று முன்தினம் தீ மூண்டது. வாளிகளில் தண்ணீரை நிரப்பி குடியிருப்பாளர்கள் தீயை அணைத்தனர்.
புளோக் 191 பூன்லே டிரைவின் வெற்றுத்தளத்தில் மின்னூட்டப்பட்டிருந்த தனிநபர் நடமாட்டச் சாதனம் ஒன்று தீப்பற்றிக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அதே புளோக்கில் இரு வாரங்களில் நிகழ்ந்துள்ள இரண்டாவது தீச்சம்பவம் இது.

