மருத்துவமனை செல்ல வசதி குறைந்தோருக்கு கட்டணச் சலுகை

மருத்துவமனை செல்ல வசதி குறைந்தோருக்கு கட்டணச் சலுகை

1 mins read
e6488c1a-d035-4205-b1c7-c7ebaa6a4ef5
மரின் பரேடு குழுத்தொகுதிக்கு உட்பட்ட கெம்பங்கான்-சாய் சீ வட்டாரத்திற்கான தேசிய நாள் விருந்து நிகழ்ச்சி சனிக்கிழமை நடந்தது. அந்த நிகழ்ச்சியில் அந்தக் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின் . படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பிடோக், ஜூரோங் ஈஸ்ட் பகுதிகளில் வசிக்கின்ற மூத்த குடிமக்களும் குறைந்த வருமான குடும்பத்தினரும் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகச் செல்லும்போது அவர்கள் குறைவான தனியார் வாடகைக் கார் கட்டணச் சலுகையைப் பெறலாம்.

எஸ்ஜி கேர்ஸ்-கோஜெக் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இதர தொண்டூழிய அமைப்புகள், சமூகக் குழுக்கள், சமூகச் சேவை அமைப்புகள் ஆகியவற்றுடன் சேர்ந்து 'எஸ்ஜி கேர்ஸ்-கோஜெக் மருத்துவப் போக்குவரத்து மானியத் திட்டம்' என்ற இந்த உதவித் திட்டத்தை நடப்புக்குக் கொண்டு வருகின்றன.

மரின் பரேடு குழுத்தொகுதிக்கு உட்பட்ட கெம்பங்கான்-சாய் சீ வட்டாரத்திற்கான தேசிய நாள் விருந்து நிகழ்ச்சி சனிக்கிழமை நடந்தது. அந்த நிகழ்ச்சியில் அந்தக் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின் சனிக்கிழமை இதனை அறிவித்தார். மேல் விவரங்கள் இனிமேல்தான் வெளியிடப்படும்.