கத்தோலிக்க பாலர்பள்ளிகளை நிர்வகிக்க மைய அமைப்பு

கத்தோலிக்க பாலர்பள்ளிகளை நிர்வகிக்க மைய அமைப்பு

1 mins read

சிங்கப்பூரில் செயல்படும் கத்தோலிக்க பாலர்பள்ளிகளை நிர்வகிக்க மைய அமைப்பு ஒன்று அமைக்கப்படுகிறது.

தேவாலய நிர்வாகத்தின் கீழ் உள்ள பாலர்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் சூழலில் கத்தோலிக்க தேவாலயம் தன் பொறுப்பில் உள்ள 12 பாலர்பள்ளிகளுக்கு ஆதரவு அளிக்கும் நோக்கத்தில் அடுத்த ஆண்டு ஒரு நிறுவனத்தைத் தொடங்குகிறது.

அந்தப் புதிய லாபநோக்கமற்ற நிறுவனம், கத்தோலிக்க தேவாலயத்தின் அனைத்து பாலர்பள்ளிகளையும் நிர்வகிக்கும். இப்போது அந்தப் பள்ளிகள் தனித்தனி நிர்வாகத்தின் கீழ் இருக்கின்றன.