தனியார் வீட்டு விலை குறைந்தது

தனியார் வீட்டு விலை குறைந்தது

1 mins read
97927611-5c4f-44eb-b702-183478961bb6
தனியார் அடுக்குமாடி வீடுகள் மற்றும் கூட்டுரிமை வீடுகளின் விலை மே மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த ஜூன் மாதம் 0.7 விழுக்காடு குறைந்தது. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் கட்டி முடிக்கப்பட்ட தனியார் அடுக்குமாடி வீடுகள் மற்றும் கூட்டுரிமை வீடுகளின் விலை மே மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த ஜூன் மாதம் 0.7 விழுக்காடு குறைந்தது.

அந்த விலைகள் இரண்டு மாதமாக அதிகரித்து இருந்தன. சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் வெளியிட்டு உள்ள அதிகாரபூர்வ மதிப்பீடுகள் மூலம் இந்த நிலவரம் தெரியவருகிறது. மத்திய வட்டாரத்திலும் இதர பகுதிகளிலும் கட்டப்பட்டு உள்ள சிறிய வீடுகள் தவிர இதர வீடுகளின் விலைகள் முறையே, 0.7 விழுக்காடு மற்றும் 0.6 விழுக்காடு குறைந்தன. இதனிடையே, 506 சதுரஅடிக்கும் குறைந்த பரப்பளவு உள்ள வீடுகளின் விலை 0.9 விழுக்காடு இறங்கியது.