சிங்கப்பூரில் நல்ல வேலை நியமன நடைமுறைகளை மேம்படுத்துவதில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏறக்குறைய 2,600 நிறுவனங்கள் குறைந்தபட்சம் சில தரங்களை கைக்கொண்டு இருக்கின்றன.
அந்த நிறுவனங்களில் சுமார் 660,000 பேர் வேலை செய்கிறார்கள். அந்தத் தரங்கள் கட்டாயமானது அல்ல என்றாலும் அவை இப்போதைய வேலையிட விதிமுறைகளுக்கு உறுதுணையாக இருந்து வேலை சூழ்நிலைகளை மேம்படுத்த உதவுகின்றன என்று மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ நேற்று தெரிவித்தார்.
கடந்த 2017 ஜூலையில் தொடங்கப்பட்ட அந்தத் தரங்கள், முதலாளிகள் தங்களுடைய வேலை இடங்களில் அமல்படுத்தக்கூடிய நல்ல நடைமுறைகளைக் குறிப்பிடுகின்றன.
திருவாட்டி டியோ, கம்ஃபர்ட்டெல்குரோ டாக்சி நிறுவனத்தின் சிட்டிகேப் கட்டடத்திற்கு நேற்று வருகை தந்தார். அப்போது அவர் முத்தரப்புத் தரங்கள் பற்றி செய்தியாளர்களிடம் பேசியபோது இந்த விவரங்களைக் கூறினார்.

