திருமணங்கள், விவாகரத்துகளின் எண்ணிக்கை குறைந்தன

திருமணங்கள், விவாகரத்துகளின் எண்ணிக்கை குறைந்தன

1 mins read
bbe14c89-9f5a-468a-8656-2cde7a652caa
திருமணப் பதிவகம். கோப்புப்படம் -

கடந்த ஆண்டில் மொத்தம் 27,007 திருமணங்கள் பதிவாகின. இது அதற்கு முந்தய ஆண்டில் பதிவான 28,212 திருமணங்களைவிட 4.3% குறைவு. சிங்கப்பூரின் புள்ளிவிவரத் துறை இந்த விவரங்களை நேற்று வெளியிட்டது.

சிவில் மற்றும் முஸ்லிம் திருமணங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு குறைந்தன என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

மேலும் கடந்த ஆண்டு மொத்தம் 7,344 திருமணங்கள் விவாகரத்தில் முடிந்தன. இதுவே 2017ஆம் ஆண்டில் நிகழ்ந்த விவாகரத்துகளின் எண்ணிக்கை 7,578 ஆக இருந்தன. 2017ஆம் ஆண்டைவிட 2018ல் நிகழ்ந்த விவாகரத்துகளின் எண்ணிக்கை 3.1% குறைந்தது.

கடந்த சில ஆண்டுகளைப் போலவே மக்கள் இன்னும் வயதான பின்னர் திருமணம் செய்துகொள்கின்றனர் என்று புள்ளிவிவரங்கள் காட்டின. முதன் முதலில் திருமணம் புரியும் ஆடவர்களின் சராசரி வயது 2008ஆம் ஆண்டில் 29.8ஆக இருந்தது. அதுவே கடந்த ஆண்டு 30.2க்கு உயர்ந்தது.

பெண்கள் முதல் திருமணம் செய்துகொள்ளும் சராசரி வயது 2008ஆம் ஆண்டில் 27.3ஆக இருந்து கடந்த ஆண்டு 28.5க்கு உயர்ந்தது.

குறிப்புச் சொற்கள்