உட்லண்ட்ஸ்: ஆயுதம் தாங்கிய கொள்ளைக்காரனால் பாலர் பள்ளி சிறார்களுக்குக் காயம்

உட்லண்ட்ஸ்: ஆயுதம் தாங்கிய கொள்ளைக்காரனால் பாலர் பள்ளி சிறார்களுக்குக் காயம்

1 mins read
9f0ca441-a18b-4a75-a50f-904739fc3346
-

கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் ஒருவர் கையில் கத்தியுடன் பாலர் பள்ளி சிறுவர்களின் ஒத்திகை நிகழ்ச்சிக்குள் புகுந்து அவர்களைப் பீதியடையச் செய்துள்ளார். எனினும் நல்ல வேளையாக எவருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. அந்த ஆடவரைப் போலிசார் கைது செய்துள்ளனர்.

திங்கட்கிழமை ( ஜூலை 29ஆம் தேதி) புளோக் 785இ உட்லண்ட்ஸ் ரைசிஸில் காலை 11 மணி வாக்கில் இந்தச் சம்பவம் நடந்தது. அந்தக் குடியிருப்புப் பகுதியிலுள்ள பொது இடத்தில் கிட்டத்தட்ட 30 பாலர் பள்ளி சிறார்கள் தேசிய தினத்தையொட்டிய நிகழ்ச்சி ஒன்றுக்காக ஒத்திகை செய்துகொண்டிருந்த போது அங்கு அந்த ஆடவர், 20 செண்டிமீட்டர் நீளமுள்ள கத்தியைக் கையில் பிடித்துக்கொண்டு வந்ததாக 'ஷின் மின்' நாளிதழ் தெரிவித்தது.

ஆடவரைக் கண்டு பயந்த சிறார்கள் தப்பியோட முயன்றபோது அவர்களில் சிலருக்குச் சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டன. ஆயினும், அவர்களை அந்த ஆடவர் ஒன்றும் செய்யவில்லை என்று சம்பவத்தை நேரில் கண்டவர் ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பான இரண்டரை நிமிடக் காணொளியை முகம்மது ரைஹான் என்பவர் பதிவேற்றம் செய்தார்.

இறுதியாக அந்தச் சந்தேக நபரை எட்டு அதிகாரிகள் கைகளில் தடிகளுடன் சுற்றி வளைத்தனர். கத்தியைக் கீழே போடுமாறு அந்த அதிகாரிகள் உத்தரவிட்டபோதும் அவர் ஆரம்பத்தில் இணங்கவில்லை. ஆயினும் இறுதியில் அவர் கத்தியைக் கீழே போட்ட பின் அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர். அந்த ஆடவருக்கு 55 வயது என்று போலிசார் கூறியது.