குடியிருப்புப் பேட்டைகளில் உள்ள பொது இடங்களில் நடைபெறும் சில சம்பவங்கள் பதற்றத்துக்கு வழிவகுக்கலாம் என்று இன, சமயம் தொடர்பான கொள்கை ஆய்வுக் கழகத்தின் ஆய்வு தெரி விக்கிறது.
பொது இடங்களில் பெரும் சத்தம் எழுப்புதல், பாரம்பரிய உணவுகளைச் சமைத்தல் போன்ற வை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம்.
பத்தில் நான்கு சிங்கப்பூரர்கள், குடியிருப்புப் பேட்டைகளில் பொருட்களை எரித்து சமய சடங்குகளை செய்வது எரிச்சலை ஏற்படுத்துவதாகக் கூறியுள்ளனர்.
குடியிருப்புப் பேட்டைகளில் நிகழும் கவலையளிக்கும் சம்பவங்களில் இதுவே முன்னிலை வகிக்கிறது. பொது இடங்களில் பெரும் சத்தம் எழுப்புவது, சமய பிரார்த்தனை, மந்திரங்களை ஓதுவது, பாரம்பரிய உணவுகளை சமைப்பது போன்றவையும் குடியிருப்பாளர்களுக்கு பிடிக்காத சம்பவங்களாக உள்ளன என்று ஆய்வு கூறுகிறது.

