2017ல் தீவு விரைவுச் சாலையில் பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தில் கிம் பியோவ் கட்டுமான நிறுவனத்துக்கு நேற்று 10,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
அங்கீகரிக்கப்படாத அந்த நிறுவனம் பாலத்தை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அப்பர் சாங்கி அருகே பாலத்தைக் கட்டும் பொறுப்பை அந்த நிறுவனம் ஏற்றிருந்தது.
2017ல் நிகழ்ந்த இந்த விபத்தில் 31 வயது சீன ஊழியர் ஒருவர் மாண்டார். பத்து பேர் காயம் அடைந்தனர். இவர்களில் இரண்டு பேர் மோசமாக பாதிக்கப்பட்டனர்.

