சிங்கப்பூர் சீனர்களை இழிவுபடுத்தும் 'ராப் பாடல் காணொளியில் பாடகர் சுபாஸ் நாயர் ஈடுபட்டதால் சேனல் நியூஸ்ஏஷியா செய்தி ஒளிவழியின் எதிர்வரும் இசை ஆவணப்படத்திலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளதாக அச்செய்திப் பிரிவு இன்று தெரிவித்தது.சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்தக் காணொளி குறித்து போலிஸ் விசாரணை நடத்தி வருகிறது.
உள்ளூர் நகைச்சுவைக் கலைஞர் பிரீத்தி நாயர், இரண்டு நிமிடங்கள், 50 வினாடிகள் நீடிக்கும் இக்காணொளியை அண்மையில் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.
சிங்கப்பூர் சீனர்களை இலக்காகக் கொண்ட இக்காணொளியில், அவர்களை அவமதிக்கும் விதமாக நான்கு எழுத்துகளைக் கொண்ட ஆங்கில அவதூறு வார்த்தைகளும் சீனர்களை இழிவுபடுத்தும் சைகைகளும் இடம்பெற்றன.
இத்தகைய செயல்களின் மூலம் சிறுபான்மையினர் சிங்கப்பூர் சீனர்கள் மீது கோபப்படத் தூண்டுகிறது என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் நேற்று செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.

