சிங்கப்பூரில் இதய அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு இப்போது கூடுதல் உதவி கிடைத்துள்ளது.
'ஆஞ்சியோபிளாஸ்ட்டி' சிகிச்சையை துல்லியமாக மேற்கொள்ள 'ரோபோ' இயந்திர மனிதன் ஒன்று அவர்களுக்கு உதவும். 'ஆஞ்சியோபிளாஸ்ட்டி' சிகிச்சையில், இதயத்தில் கொழுப்புக் கட்டிகளால் அடைப்புக்குள்ளான ரத்த நாளங்களை விரிவுபடுத்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் 'ஸ்டெண்ட்' எனும் கருவியைப் பொருத்துவர்.
தென்கிழக்காசிய வட்டாரத்தில் இந்தச் சிகிச்சையை மேற்கொள்ள இயந்திர மனித தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் முதல் மருத்துவக் குழுவாக டான் டோக் செங் மருத்துவமனையின் இதய அறுவை சிகிச்சைக் குழு திகழ்கிறது.
இதுவரை இப்படிப்பட்ட சிகிச்சையை 70 நோயாளிகள் பெற்று நல்ல உடல்நிலையில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.இதய அறுவை சிகிச்சையின்போது இயந்திர மனிதனின் உதவியோடு 'ஸ்டெண்ட்' கருவி மிகத் துல்லியமாக பொருத்தப்படுகிறது.
இது மனிதனால் ஏற்படும் தவற்றைப் பெரியளவில் குறைக்கிறது என்று அம்மருத்துவமனையின் இதயப் பிரிவின் தலைவர் டாக்டர் பால் ஓங் தெரிவித்தார்.

