முன்னாள் அமைச்சர் லிம் சீ ஓன், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் வேந்தராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2015ஆம் ஆண்டிலிருந்து அந்தப் பதவியை வகித்து வந்த ஜே.ஒய் பிள்ளை, அதனை திரு லிம்மிடம் ஒப்படைக்கப்போவதாக சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் நேற்று அறிவித்தது. நிதித்துறை, தற்காப்பு, தேசிய வளர்ச்சி ஆகிய அமைச்சுகளில் நிரந்தரச் செயலாளராக திரு பிள்ளை பணியாற்றியிருக்கிறார்.
திரு லிம்மின் ஐந்து ஆண்டு பதவிக்காலம் இன்று தொடங்குகிறது. "திரு லிம் எங்கள் வேந்தராக வந்ததால் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்திற்கு பெருமையும் பாக்கியமும் பெற்றுள்ளது,"என்று பல்கலைக்கழகத்தின் தலைவர் லில்லி கோங் கூறினார்.

