முன்னாள் அமைச்சர் லிம் சீ ஆன், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக் கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
கடந்த 2015 முதல் அந்தப் பல்கலைக்கழக வேந்தராகப் பணியாற்றி உள்ள ஜே ஒய் பிள்ளையிடம் இருந்து அந்தப் பொறுப்பை திரு லிம் மேற்கொள்கிறார் என்று புதன்கிழமை பல்கலைக்கழகம் அறிவித்தது.
திரு லிம், நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஏற்கெனவே பணியாற்றி இருக்கிறார். அவர் நேற்று முதல் ஐந்து ஆண்டு காலத்திற்கு வேந்தராக தொண்டாற்றுவார்.
பல்கலைக்கழக ஏற்பாட்டு முறையில் வேந்தர், துணை வேந்தர் பதவிகள் மிக முக்கியமானவை என்று இந்தப் பல்கலைக்கழகம் தெரிவித்து உள்ளது.
இதன் புதிய துணை வேந்தராக திரு எட்டி டியோ பணியாற்றுவார். திரு லிம், 2000 முதல் 2008 வரை கெப்பல் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராகச் சேவையாற்றி இருக்கிறார்.
சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் நிர்வாகச் சபை உறுப்பினராகவும் அவர் தொண்டாற்றி உள்ளார்.
திரு லிம் 1980 முதல் 1983 வரை பிரதமர் அலுவலகத்தில் இலாகா இல்லாத அமைச்சராகபணியாற்றினார். 1977 முதல் 1992 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அவர், 1979 முதல் 1983 வரை என்டியுசியின் பொதுச் செயலாளராகவும் தொண்டாற்றிஇருக்கிறார்.

