சிங்கப்பூரில் முக்கால்வாசி சிறிய, நடுத்தர நிறுவனங்கள் அடுத்த 12 மாதத்தில் தொழில் வளர்ச்சி அடையும் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.
அதோடு, ஆய்வில் கலந்துகொண்ட நிறுவனங்களில் சுமார் 90 விழுக்காட்டு நிறுவனங்கள், வெளிநாடுகளில் தாங்கள் தொழில் துறையில் ஈடுபடுவதாகத் தெரிவித்து உள்ளன.
இருந்தாலும் வெளிநாடுகளில் விரிவடைய மூலதனம் இல்லாதது தங்களுக்குச் சிரமமாக இருக்கிறது என்று மூன்றில் ஒரு பங்கு சிறிய, நடுத்தர நிறுவனங்கள் அந்த ஆய்வில் தெரிவித்து உள்ளன.
அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தொழில் பற்று அட்டை தொடக்க நிகழ்ச்சியில் நேற்று இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டன.
ஆண்டுக்கு் சராசரியாக 7.6 தொழில்துறை பயணங்களை இந்த நிறுவனங்களின் முதலாளிகள் மேற்கொள்கிறார்கள் என்று அந்த ஆய்வு கூறுகிறது.

