நார்வே:சால்மன் மீன் சாப்பிட பாதுகாப்பானது

நார்வே:சால்மன் மீன் சாப்பிட பாதுகாப்பானது

1 mins read

சிங்கப்பூரில் விற்கப்படும் புதிய நார்வே அட்லாண்டிக் சால்மன் மீன்களில் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட தொற்றுநோய்க் கிருமிகள் இல்லை என்று நார்வே கடல் உணவு மன்றம் இங்குள்ள வாடிக்கையாளர்களுக்கு உறுதி அளித்து இருக்கிறது.

அந்த மீன்கள் சாப்பிட பாதுகாப்பானவை என்றும் அது தெரிவித்து உள்ளது. பாக்டீரியா கிருமிகள் இருந்த மீன்கள் மீட்டுக்கொள்ளப்பட்டு விட்டதாக யு ஃபிஷ் என்ற இறக்குமதி நிறுவனம் தெரிவித்து உள்ளது.