இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கருடன் விவியன் பாலகிருஷ்ணன் சந்திப்பு

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கருடன் விவியன் பாலகிருஷ்ணன் சந்திப்பு

1 mins read
de3745e9-9334-466c-b514-897242e23345
-

சிங்கப்பூர் அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் இந்தியா, பிரிட்டன் மற்றும் நார்வேயைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். பேங்காக் நகரில் நடைபெற்ற ஆசியான் வெளியுறவு அமைச்சர்களுக்கான கூட்டத்திற்கு இடையே இந்தச் சந்திப்புகள் நடைபெற்றன.

இந்திய வெளியுறவு அமைச்சருடனான சந்திப்பில், அவரும் டாக்டர் பாலகிருஷ்ணனும் இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டுறவை வலுப்படுத்திக்கொண்டனர். அத்துடன் அவர்கள் வட்டார பொருளியல் ஒருங்கிணைப்பை முடுக்குவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினர். இந்தியா உள்ளிட்ட ஐந்து நாடுகள் சம்பந்தப்பட்டுள்ள 'ஆர்சிஇபி' பொருளியல் பங்காளித்துவத்தைப் பற்றியும் இரண்டு அமைச்சர்கள் கலந்துரையாடினர்.

பிரிட்டனின் புதிய வெளியுறவு அமைச்சர் டோமினிக் ராப்புடனான சந்திப்பில் டாக்டர் பாலகிருஷ்ணன் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.