அடுத்த இரண்டு வாரங்களுக்கான வானிலை ஜூலை மாதத்தின் கடைசி இரண்டு வாரங்களைக் காட்டிலும் அதிக வெப்பமாக இருக்கும். ஆயினும் சில நாட்களுக்கு காற்று அதிகம் வீசும் என சிங்கப்பூர் வானிலை ஆய்வகம் முன்னுரைத்துள்ளது. அத்துடன் நான்கைந்து நாட்களுக்கு மழை பெய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மழைப்பொழிவு அடுத்த இரண்டு வாரங்களுக்கு வழக்கத்தைவிட குறைவாக இருக்கும் என்று வானிலை ஆய்வகம் தெரிவித்தது.
ஜூலை மாதத்தின் கடைசி இரண்டு வாரங்களைப் போல் ஆகஸ்ட் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களும் வெப்பமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினசரி வெப்பநிலை 26 டிகிரி செல்சியசுக்கும் 33 டிகிரி செல்சியசுக்கும் இடைப்பட்டிருக்கும் . அத்துடன் சில நாட்களில் வெப்பநிலை 34 டிகிரி செல்சியசைத் தாண்டக்கூடும்.

