பீச் ரோடு, ரேஸ் கோர்ஸ் ரோடு, சிராங்கூன் ரோடு, பாலி லேன், மிடில் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள உடற்பிடிப்பு நிலையங்கள், பொழுதுபோக்கு நிலையங் களில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
நான்கு நாட்கள் நடைபெற்ற சோதனை நேற்று நிறைவடைந்தது. இந்தச் சோதனையில் நான்கு உடற்பிடிப்பு நிலையங்கள் உரிமம் இன்றி செயல்பட்டது தெரிய வந்தது.
மேலும் 39க்கும் 53 வயதுக்கும் இடைப்பட்ட இரண்டு பெண்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டனர். முப்பதுக்கும் 45வயதுக்கும் இடைப்பட்ட 11 பெண்களும் 43 வயது ஆடவரும் மாதர் சாசனத்தின் கீழ் கைது ெசய்யப்பட்டனர்.

