சமூகத்தினருக்கு உதவியோர்: அங்கீகரிப்பும் விருதளிப்பும்

ஒவ்வொரு மாதமும் டர்பன் சாலையில் அமைந்துள்ள ஆஷ்ரம் போதையர் மறுவாழ்வு இல்லத்திற்குச் சென்று, மளிகைப் பொருட்கள் எடுத்துக்கொண்டு கேலாங் பாரு பகுதியிலுள்ள நான்கு வசதி குறைந்த குடும்பங்களுக்கு விநியோகம் செய்கிறார் தொண்டூழியரான 67 வயது திரு ராமையா மாரப்பன்.

இவரைப் போன்ற தொண்டூ ழியர்களின் பங்களிப்பை அங்கீ கரிக்க, இந்து அறக்கட்டளை வாரியத்தின் கீழ் இயங்கும் ஆஷ்ரம் போதையர் மறுவாழ்வு இல்லம் தொண்டூழியர் அங்கீகரிப்பு தேநீர் விருந்துக்கு நேற்று ஏற்பாடு செய்திருந்தது.

தனது 20வது ஆண்டு நிறைவை இவ்வாண்டு கொண்டாடும் ஆஷ்ரம், சிறைத் தண்டனை முடிந்து விடுதலை பெறவிருப்பவர்களுக்கு சமுதாயத்துடன் ஒருங்கிணைந்து செயல்படவும் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழவும் உதவுகிறது.

இந்த நோக்கத்திற்கு இணங்க சிங்கப்பூர் மறுவாழ்வு தொழில்கள் கூட்டுநிறுவனமும் (SCORE) உள்துறை அமைச்சும் ஆஷ்ரமத்திற்கு ஆதரவாக உள்ளன.

ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலய பிஜிபி மண்டபத்தில் நடந்த தேநீர் விருந்தில் சுமார் 120 தொண்டூழியர்கள் பங்குபெற்றதோடு இல்லவாசிகளும் இல்ல ஊழியர்களும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த புக்கிட் பாத்தோக் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு முரளி பிள்ளை, ஒருவரின் சமூக அந்தஸ்தை மேம்படச் செய்வது சுலபமான காரியமல்ல என்றும் அதற்கு ஒருங்கிணைந்த முயற்சி தேவைப்படுகிறது என்றும் கூறினார். அந்த ஒருங்கிணைந்த முயற்சியில் தொண்டூழியர்களின் முயற்சி மிகவும் முக்கியமானதென்று அவர் வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியில் ஆஷ்ரமத்திற்கு ஆதரவளித்து வரும் 16 பங்காளி அமைப்புகளுக்கு விருதுகளும் 80 தொண்டூழியர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இதுவரையில் 900 இல்லவாசிகளை நல்வழிப்படுத்தி சமூகத்துடன் ஒருங்கிணைத்த பெருமை தொண்டூழியர்களைச் சேரும் என்று தமது உரையில் ஆஷ்ரம் இல்லத்தின் துணைத் தலைவர் சின்னையா குணசேகரன் தெரிவித்தார்.

ஆஷ்ரமத்தில் உள்ள பசுமைத் தோட்டத்தை உருவாக்க ‘டெலி டைரெக்’ (Teledirect) நிறுவனத்தைச் சேர்ந்த கிட்டத்தட்ட 20 ஊழியர்கள் தங்கள் நிறுவன சமூகத் திட்டத்தின் கீழ் பங்காற்றினர்.

"தனிப்பட்ட முறையில் ஆஷ்ரமத்திற்கு தொண்டூழியம் புரிந்து கொண்டிருந்தபோது, சக நிறுவன ஊழியர்களையும் இதில் ஈடுபடுத்தலாம் என்று நினைத்தேன்.

"வெவ்வேறு இனப் பின்னணியிலிருந்து வரும் ஊழியர்கள் இந்த பசுமைத் தோட்டத்தை அடிமட்டத்திலிருந்து உருவாக்கியுள்ள

தைக் குறித்து நாம் பெருமிதம் கொள்கிறோம்,” என்றார் ‘டெலிடைரெக்’ நிறுவனத்தை சேர்ந்த மூத்த நிர்வாகி திரு சூரியபுத்திரன் விஜய்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!