அடுத்த பொதுத் தேர்தலில் தங்கள் கட்சி ஐந்து இடங்களில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தலைமைச் செய லாளர் சீ சூன் ஜுவான் தெரி வித்துள்ளார்.
ஹாலந்து-புக்கிட் தீமா, மார்சிலிங்-இயூ டீ குழுத் தொகுதிகள், புக்கிட் பாத்தோக், புக்கிட் பாஞ்சாங், யுஹுவா தனித் தொகுதிகள் ஆகியவையே அந்த ஐந்து தொகுதிகள்.
வரும் 2021ஆம் ஆண்டுக் குள் நடத்தப்பட வேண்டிய அடுத்த பொதுத் தேர்தலில் தான் போட்டியிடும் தொகுதி களை அறிவித்த முதல் எதிர்க்கட்சி சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று அறிவிக்கப்பட்ட ஐந்து தொகுதிகளிலும் தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு தனது கட்சி உறுப்பினர்கள் தொகுதிச் சுற்றுலா மேற்கொள்வார்கள் என்றும் டாக்டர் சீ தெரிவித்தார்.

