எஸ்கில்ஸ்ஃபியூச்சர்: மைக்ரோசாஃப்ட் சான்றிதழ் பயிற்சி

எஸ்கில்ஸ்ஃபியூச்சர்: மைக்ரோசாஃப்ட் சான்றிதழ் பயிற்சி

1 mins read

சிங்கப்பூரர்கள் தங்களுடைய ஸ்கில்ஸ்ஃபியூச்சர் நிதியைப் பயன்படுத்தி இனி மைக்ரோ சாஃப்ட் வகுப்புகளில் சேரவும் சான்றிதழ்களைப் பெறவும் முடியும்.

இதற்கான ஒப்பந்தத்தில் சிங்கப்பூர் ஸ்கிஃல்ஸ்பியூச்சரும் உலகின் மாபெரும் தொழில் நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட்டும் நேற்று கையெழுத்திட்டன.

'ஸ்கில்ஸ்ஃபியூச்சர் டிஜிட்டல் வொர்க்பிளேஸ்' திட்டத்தின் கீழ் இணையப் பாதுகாப்பு, போலிச் செய்திகளை அடையாளம் கண்டுபிடித்து அவற்றிலிருந்து பாதுகாக்கும் டிஜிட்டல் வகுப்புகளில் சிங்கப்பூரர்கள் சேர முடியும் என்று நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

தற்போதைய மின்னிலக்க பொருளியலுக்கு சிங்கப் பூரர்களையும் சிங்கப்பூர் நிறுவ னகளையும் ஆயத் தப்படுத்துவதே இம்முயற்சிகளின் நோக்கமாகும்.

ஸ்கில்ஸ்ஃபியூச்சர் விழாவில் நேற்று பங்கேற்ற தொடர்பு, தக வல் மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி புதிய ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திட்டங்கள் பற்றிய விவரங்களை வெளியிட்டார்.

இதே நிகழ்ச்சியில் மைக் ரோசாஃப்ட் நிறுவனமும் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூரும் புரிந்துணர்வுக் குறிப்பில் கையெழுத்திட்டன.

மேலும் தீவிர தொழில்நுட்ப பயிற்சி திட்டமும் நேற்றுத் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த மூவாண்டு பயிற்சித் திட்டம், சிறிய-நடுத்தர நிறுவனங்கள் தொழில்நுட்பங்களை துரித கதியில் புகுத்திக்கொள்ளவும் தனிப்பட்டவர்கள் மின்னிலக்க ஆற்றலை மேம்படுத்திக்கொள்ளவும் உதவும்.

புதிய ஒத்துழைப்பு மூலம் 100 சிறிய, நடுத்தர நிறுவனங்களும் 5,000 தனிப்பட்டவர்களும் பலன் அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.