சோமர்செட் வட்டார மேம்பாடு: இளையர்கள் பரிந்துரை

சோமர்செட் வட்டார மேம்பாடு: இளையர்கள் பரிந்துரை

1 mins read
640f2fb7-d45d-4a05-b3c7-1324d7aa1b8e
பரிந்துரைகளைச் செவிசாய்க்கும் திரு பே யாம் கெங் (வலமிருந்து மூன்றாவது). படம்: சாவ்பாவ் -

சோமர்செட் வட்டாரத்தை மேம்படுத்த இளையர்கள் பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர்.

சோமர்செட் வட்டாரத்தை இளையர்கள் தொடர்பான அமைப்புகள், வர்த்தகங்கள், சேவை நிறுவனங்கள் ஆகியவற்றுக்கான மையமாக கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற வரவுசெலவுத் திட்ட விவாதத்தின்போது கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு அடையாளம் கண்டது.

சோமர்செட் வட்டாரத்தில் என்னென்ன இடம்பெற வேண்டும் என்பது குறித்து ஏற்கெனவே ஏறத்தாழ 14,000 இளையர்களிடம் அமைச்சு கருத்து சேகரித்துள்ளது.

கடந்த மே மாதத்திலும் ஜூன் மாதத்திலும் இதுகுறித்து இணையம் வழி கலந்துரையாடல்கள், ஆய்வுகள் போன்றவை நடத்தப்பட்டன.

இந்நிலையில், சோமர்செட் வட்டாரத்தை மேம்படுத்த வழிவகை காண்பது குறித்து நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் 36 இளையர்கள் பங்கெடுத்தனர்.

சோமர்செட் வட்டாரத்தில் கார்கள் இல்லாத நாட்கள், உள்ளூர் தொழில்முனைவர்கள் கடைகள் திறப்பதற்கான இடம் ஆகியவற்றை அமைக்கலாம் என்று அவர்கள் பரிந்துரைகளை முன்வைத்தனர்.

இதன்மூலம் இளம் சிங்கப்பூரர்களை சோமர்செட் வட்டாரம் ஈர்க்கும் என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர். சோமர்செட் வட்டார மேம்பாட்டுக்கான நிதி ஒதுக்கீடு, தேர்ந்தெடுக்கப்படும் பரிந்துரைகளைப் பொறுத்து நிர்ணயிக்கப்படும் என்று கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் பே யாம் கெங் தெரிவித்தார்.

சிங்கப்பூர் இளையர்களுக்கு நீக்குப்போக்குமிக்க அணுகுமுறையை நடைமுறைப்படுத்த விதிமுறைகளை மறுஆய்வு செய்ய அமைச்சு தயங்காது என்றார் அவர். சோமர்செட் வட்டாரப் புதுப்பிப்பு பொதுமக்களுடன் இணைந்து எவ்வாறு தீர்வு

களைக் காண்பது என்பது குறித்து அறிய அரசாங்கத்துக்கு உதவும் என்று திரு பே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.