யூஹுவாவில் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி தொகுதி உலா

யூஹுவாவில் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி தொகுதி உலா

1 mins read
b64b38f2-3d76-40db-b0f0-366ae55d8f0b
யூஹுவாவில் உள்ள உணவு அங்காடி நிலையத்தில் குடியிருப்பாளர்களைச் சந்தித்துப் பேசிய சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி தலைமைச் செயலாளர் டாக்டர் சீ சூன் ஜுவான். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி நேற்று காலை யூஹுவாவில் தொகுதி உலா சென்றது.

தலைமைச் செயலாளர் டாக்டர் சீ சூன் ஜுவான் தலைமையில் அந்தக் கட்சியைச் சேர்ந்தோர் அத்தொகுதியின் குடியிருப்பாளர்களைச் சந்தித்துப் பேசினர்.

வீடமைப்பு, சுகாதாரப் பராமரிப்பு, வேலைகள் ஆகியவை தொடர்பாக குடியிருப்பாளர்களின் கருத்துகளை டாக்டர் சீ கேட்டறிந்தார். அதே சமயத்தில் இளம் சிங்கப்பூரர்களுடனும் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி தொடர்புகொள்ள வேண்டும் என்றார் அவர்.

யூஹுவாவில் உள்ள உணவு அங்காடி நிலையத்துக்குச் சென்ற சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியினர் அங்கிருந்தோரிடம் பேசி தங்களது கட்சியின் பிரசுரத்தை விநியோகித்தனர். தொகுதி உலாவுக்குப் பிறகு டாக்டர் சீ செய்தியாளர்களிடம் பேசினார்.