மரீன் பரேட்டில் விபத்து; பேருந்து ஓட்டுநர் கைது

மரீன் பரேட்டில் விபத்து; பேருந்து ஓட்டுநர் கைது

1 mins read
967e53d0-61c7-4b37-8b45-0367c8b9d0d2
-

பாதசாரி ஒருவரை இடித்துத் தள்ளிய ஈரடுக்குப் பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டிருக்கிறார். கைதானவருக்கு 49 வயது.

பிடோக் சவுத் அவென்யூ 2ஐ நோக்கிச் செல்லும் மரீன் பரேட் ரோடு வழியாக நடந்த இந்த விபத்து குறித்து போலிசாருக்கு வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்குத் தகவல் கிடைத்தது.

விபத்தில் காயமடைந்த 72 வயது மூதாட்டி சுயநினைவு இழந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி மற்றொருவருக்குக் கவலைக்கிடமான காயத்தை விளைவித்ததன் பேரில் அந்தப் பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

போலிசார் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.