சிறார் பாதுகாப்பு: 18 வயது வரையிலானோரையும் சேர்க்கத் திட்டம்

16 வயது வரையிலானோரை சிறார் எனக் கூறி துன்புறுத்தல், கைவிடப்படுவது போன்றவற்றிலிருந்து அவர்களைப் பாதுகாக்கும் சட்டம் நடைமுறையில் உள்ளது. இத்தகைய பாதுகாப்பை 18 வயது வரையிலானோர் பெற சட்டம் திருத்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறார், இளையர் சட்டம் 1949ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆகக் கடைசியாக அச்சட்டம் 2011ஆம் ஆண்டில் திருத்தப்பட்டது. குற்றங்கள் புரிந்த சிறார், பெற்றோர் அல்லது பராமரிப்பாளர்களால் துன்புறுத்தப்பட்ட அல்லது கைவிடப்பட்ட சிறார், தங்களது நடத்தையை மேம்படுத்த நீதிமன்றத்தின் வழிக்காட்டுதலை நாடும் பெற்றோரின் பிள்ளைகள் ஆகியோருக்கு இந்தச் சட்டம் ஆதரவு வழங்குகிறது.

தற்போது 16 வயதுக்கும் மேற்பட்டோர் நீதிமன்றங்களில் பெரியவர்களாகக் கருதப்படுகின்றனர்.

“இந்தச் சட்டத்தைத் திருத்த நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது மசோதா ஒன்றை தாக்கல் செய்தார் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ. மேம்படுத்தப்பட்ட பராமரிப்பு, பாதுகாப்பு ஆணையை அறிமுகம் செய்யவும் அமைச்சு பரிந்துரை செய்துள்ளது. இந்தச் சட்டத்தின்படி பிள்ளைகளுக்காக முடிவுகளை எடுக்க பெற்றோர் அல்லது பராமரிப்பாளர்களைத் தவிர வேறொருவருக்கு நீதிமன்றம் அதிகாரம் வழங்கலாம்.

இருப்பினும், மிகவும் முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு முன்பு அதிகாரிகளிடமிருந்தோ அல்லது நீதிமன்றத்திடமிருந்தோ அனுமதி பெற வேண்டும்.

பிள்ளைகள் தங்கள் குடும்பத்துடன் மீண்டும் இணைவது சரியல்ல என்று நீதிமன்றம் கருதும் பட்சத்தில் சீரான, நீண்டகால பராமரிப்பு ஏற்பாடுகளை நிலைநாட்ட இந்த மாற்றம் வகை செய்யும்.

இந்தச் சட்டம் அப்பிள்ளை 21 வயதை எட்டும் வரை நடப்பில் இருக்கும் என்று அமைச்சு தெரிவித்தது. வளர்ப்புப் பெற்றோருக்கான குழந்தை பராமரிப்பு விடுப்பை விரிவுப்படுத்துவது குறித்தும் நாடாளுமன்றத்தில் பரிந்துரை செய்யப்பட்டது.

இளம் குற்றவாளிகள் திருந்தி வாழ குறிப்பிட்ட இளையர் நீதிமன்ற ஆணையை அவர்கள் நிறைவேற்றும்போது அவர்களது பெயர்களில் உள்ள குற்றப் பதிவுகள் நீக்க சட்டம் திருத்தப்படக்கூடும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!