பெறப்படாத $12.4 மில்லியன்: மோசடி நிகழவில்லை

பெறப்படாத $12.4 மில்லியன்: மோசடி நிகழவில்லை

1 mins read

மேம்பாட்டுத் திட்டத்தை நிறைவுசெய்ய ஒப்பந்தக்காரர் கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதற்காக விதிக்கப்பட இருந்த அபராதங்களை சிங்கப்பூர் தேசிய கலைக்கூடம் வசூலிக்காமல் விட்டுக்கொடுத்தபோது மோசடி ஏதும் நிகழவில்லை என்று கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அபராதங்களை வசூலிக்காமல் விட்டுக்கொடுத்தது, டகேனாக்கா - சிங்கப்பூர் பைலிங் கூட்டு முயற்சிக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தங்களில் செய்யப்பட்ட மாற்றங்கள் ஆகியவை காரணமாக மொத்தம் $12.4 மில்லியன் பெறப்படவில்லை. இதைக் கடந்த மாதம் தலைமைக் கணக்காளர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

செலுத்த வேண்டிய தொகைக்கு மேலாக செலுத்தப்படவில்லை என்று திருவாட்டி ஃபூ தெரிவித்தார். எனவே பணத்தை மீட்கும் நடவடிக்கையில் இறங்க தேவையில்லை என்றார் அவர்.

ஹவ்காங் நாடாளுமன்ற உறுப்பினர் திரு பிங் எங் ஹுவாட் கேட்ட கேள்விக்குத் திருவாட்டி ஃபூ பதலளித்தார்.

இத்தகைய பெரிய திட்டத்துக்கு அபராதங்கள் வசூலிக்கப்படாமல் விட்டுக்கொடுக்கப்படுவதும் ஒப்பந்தங்களில் மாற்றங்கள் ஏற்படுவதும் எதிர்பார்க்கப்படும் ஒன்று என்றார் திருவாட்டி ஃபூ.