பூலாவ் உபின் மீன் பண்ணை தங்குமிடத்தில் தீ

பூலாவ் உபின் மீன் பண்ணை தங்குமிடத்தில் தீ

1 mins read
6ec88b2b-1aff-442d-abca-817c7bda08c3
-

பூலாவ் உபின் தீவிலுள்ள மீன் பண்ணையின் தங்குமிடத்தில் ஆகஸ்ட் 1ஆம் தேதி (வியாழக்கிழமை) மாலை தீ மூண்டது.

கரும்புகை எழும்பிய இத்தீச்சம்பவம் குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையிடம் ஸ்டாம்ப் வினவியது. அதற்குப் பதிலளித்த குடிமைத் தற்காப்புப் படை, "பூலாவ் உபினின் வடக்கே அமைந்துள்ள கரையோர மீன் பண்ணையில் தீ மூண்டிருப்பதாக ஆகஸ்ட் முதல் தேதி மாலை 6.55 மணியளவில் எங்களுக்குத் தகவல் கிடைத்தது," எனத் தெரிவித்தது.

மீன் பண்ணையின் தங்குமிடத்தில் மூண்ட தீயைக் குடிமைத் தற்காப்புப் படை விரைவில் அணைத்தது. இச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. தீ மூண்டதற்கான காரணத்தைக் குடிமைத் தற்காப்புப் படை விசாரித்து வருகிறது.

படம், செய்தி: ஸ்டாம்ப்