சூடான பருவநிலையைச் சுட்டிக்காட்டி வயதான தம்பதியினரை ஏற்க மறுத்த ஓட்டுநரை 'கோஜெக்' நிறுவனம் விசாரித்து வருகிறது.
பாசிர் பாஞ்சாங் வட்டாரத்தில் அமைந்துள்ள 'சிட்டிலிங்க் வெர்ஹௌஸ் கொம்பிலக்ஸ்' (Citilink Warehouse Complex) என்ற இடத்திலிருந்து சிலேத்தாரில் இருக்கும் தங்களின் தங்குமிடத்திற்குப் பயணம் செல்ல இந்தத் தம்பதியினர் 'கோஜெக்' செயலியின் மூலம் வாடகை காருக்குப் பதிவு செய்திருந்தனர்.
பயணம் நிச்சயமாக்கப்பட்ட பின்பு, இந்தப் பயணத்தின் ஓட்டுநர், சூடாக இருப்பதால் ஓய்வு எடுத்துக்கொள்வதாக மதியம் 3.08 மணிக்கு இத்தம்பதியினரிடம் தெரிவித்தார்.
ஓட்டுநர் அனுப்பிய குறுஞ்செய்தியின் ஆர்த்தம் என்ன என்று அத்தம்பதியினர் வினவியபோது அதற்கு ஓட்டுநர் பதிலளிக்கவில்லை.
இந்தச் சம்பவத்தை 'கோஜெக்' நிறுவனம் விசாரித்து வருகிறது.
"பயணிகளிடமிருந்து கிடைக்கும் அனைத்து கருத்துகளையும் கோஜெக் முக்கியமாகக் கருதுகிறது. இந்தச் சம்பவத்தை விசாரித்தும் வருகிறது," என்று 'கோஜெக்' பேச்சாளர் ஒருவர் கூறினார்.
செய்தி, படம்: ஸ்டாம்ப்

