பழைய வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளை வாங்கக்கூடியவர்களின் எண்ணிக்கையைக் கூட்டும் வகையில் மத்திய சேமநிதிக் கழகம் அதன் விதிமுறைகளை மாற்றி இரு மாதங்களில் பிறகு அவ்வீடுகளுக்கான தேவை அதிகரித்துள்ளது.
கடந்த மே, ஜூன் மாதங்களில், 40 ஆண்டுகளுக்கும் மேலான சுமார் 564 வீடுகள் கைமாறின.
இது, சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் கைமாறிய 403 பழைய வீடுகளைவிட அதிகம்.
முப்பது முதல் 40 ஆண்டுகள் பழமையான வீடுகளின் பரிவர்த்தனை இதே காலகட்டத்தில் 10.4 விழுக்காடு அதிகரித்து 1,219 ஆக இருந்தது.
ஆரஞ்ச்டீ அண்ட் டீ நிலச்சொத்து நிறுவனம் தனது அரையாண்டு அறிக்கையில் இந்தப் புள்ளிவிவரத்தை தொகுத்து வெளியிட்டது.
இரண்டாம் காலாண்டில் பொதுவாகவே விற்பனை அதிகமாக இருக்கும் என்று நிறுவனத்தின் ஆய்வுப் பிரிவின் தலைவர் குமாரி கிறிஸ்டீன் சன் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 6) கூறினார்.

