சிங்கப்பூர் சமரச உடன்படிக்கையில் புதன்கிழமை (ஆகஸ்ட் 7) 46 நாடுகள் கையெழுத்திட்டன.
சமரசத்தின் மூலம் ஏற்படும் அனைத்துலக ஒப்பந்தங்களுக்கான ஐக்கிய நாட்டு உடன்படிக்கை என்றும் அறியப்படும் இதில் கையெழுத்திட்ட முதல் சில நாடுகளில் அமெரிக்காவும் சீனாவும் உள்ளடங்கும்.
உடன்படிக்கையில் கையெழுத்திட்ட முதல் நாடு சிங்கப்பூர். சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் சிங்கப்பூரைப் பிரதிநிதித்து கையெழுத்திட்டார்.
இந்தியா, தென் கொரியா ஆகிய ஆசிய நாடுகளும் உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. உடன்படிக்கையில் கையெழுத்திடும் நாடுகள், தத்தம் நீதிமன்றங்களில் அனைத்துலக வணிகச் சமரச ஒப்பந்தங்கள் நிலைநாட்டப்படுவதை உறுதிப்படுத்தவேண்டும்.

