இந்தியாவில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் எமிரேட்ஸ் நிறுவனத்துடன் போட்டி

1 mins read
37b805d7-e963-4ca2-90ed-51f66ff95c81
-

இந்தியாவின் அனைத்துலக பயணிகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் எமிரேட்ஸ் நிறுவனத்துடன் போட்டியிடுகிறது. உலகத்தில் ஆக வேகமாக வளரும் விமானப் பயணச் சந்தைகளில் இதுவும் ஒன்று.

புதுடெல்லிக்கும் சிங்கப்பூருக்கும் இடையே சேவையாற்றும் முதல் அனைத்துலக விமானச் சேவையை, சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் இலாபமற்ற முயற்சியான 'விஸ்தாரா' கடந்த செவ்வாய்க்கிழமை (6 ஆகஸ்ட்) அமல்படுத்தியது.

மத்திய கிழக்கின் பிரதான விமான நிறுவனங்களான எமிரேட்ஸ், எடிஹாட் ஏர்வேஸ் ஆகியன இதுவரை ஆதிக்கம் செலுத்தி வரும் சந்தையில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இந்தப் புது முயற்சியைத் தொடங்கியுள்ளது.

இந்தியாவின் விமானப் பயணிகள் எண்ணிக்கை 2037ஆம் ஆண்டுக்குள் மூன்று மடங்கிற்கும் மேலாக அதிகரித்து கிட்டத்தட்ட 520 மில்லியனை எட்டும் என்று அனைத்துலக ஆகாயப் பயணச் சங்கம் கூறுகிறது.

அத்துடன், கடந்த ஆண்டு இந்தியாவிற்குச் சென்ற அல்லது அங்கிருந்து புறப்பட்ட 63 மில்லியன் பயணிகளில் மூன்றில் இருபகுதியினர் வெளிநாட்டு விமானச் சேவைகளில் பயணித்தனர்.