'எஸ்பிஎஸ் டிரான்சிட்', 'எஸ்ஐஏ' பேரில் மோசடி குறித்து எச்சரிக்கை

'எஸ்பிஎஸ் டிரான்சிட்', 'எஸ்ஐஏ' பேரில் மோசடி குறித்து எச்சரிக்கை

1 mins read

பிரபல சிங்கப்பூர் நிறுவனங்களின் பேரில் இணைய மோசடி செய்யப்பட்டு வருவது குறித்து நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. 'எஸ்பிஎஸ் டிரான்சிட்', 'எஸ்ஐஏ', 'லஸடா' போன்ற நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்திப் பண மோசடி செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போலிசாரிடம் இதுகுறித்து புகார் செய்யப்பட்டுள்ளது. பலர் மோசடிக்கு ஆளாகாமல் தப்பித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறப்பட்டது. ஆனால் மோசடியை உண்மை என்று ஒரு பெண் நம்பி $2,000ஐ இழந்துள்ளார்.