வேலை தருவதாக $100,000 மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது

வேலை தருவதாக $100,000 மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது

1 mins read

சிங்கப்பூரில் வேலை கிடைக்க உதவி செய்வதாகக் கூறி, கிட்டத்தட்ட $100,000க்கும் மேலான தொகையை மோசடி செய்ததன் சந்தேகத்தில் இரு பங்ளாதேஷ் ஆடவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 26 வயது ருபெல் முகம்மது, 30 வயதுடைய புய்யன் ரோபியஸ் ஆகிய இருவரும் மோசடி தொடர்பில் ஒரு குற்றச்சாட்டை எதிர்நோக்குகின்றனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கும் சென்ற மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் இதேபோன்று குறைந்தது 30 மோசடி தொடர்பான புகார்கள் கிடைத்துள்ளதாக போலிசார் தகவல் வெளியிட்டனர். வேலை முகவர்கள் என்ற பேரில் சிங்கப்பூரில் வேலை கிடைப்பது நிச்சயம் என அவர்கள் கூறியதாகப் பாதிக்கப்பட்டவர்கள் புகார்களில் தெரிவித்திருந்தனர். வங்கிக் கணக்கில் பணமாற்றம் செய்ததும் பாதிக்கப்பட்டவர்களுக்கு போலி விண்ணப்பக் கடிதங்கள் கிடைத்தன. ஆனால் அதன் பின்னர் வேலை முகவர்களைத் தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. மீண்டும் வழக்கு இம்மாதம் 13ஆம் தேதி விசாரணைக்கு வரும்.