சிங்கப்பூர்க் கொடியை எரித்ததாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

சிங்கப்பூர்க் கொடியை எரித்ததாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

1 mins read
b5c65ef0-8c9b-413e-aa7a-657b50f3353d
-

சிங்கப்பூரின் தேசியக் கொடியை எரித்ததன் பேரில் 25 வயது ஆடவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

குற்றவியல் குறும்புச்செயல் செய்ததாக எல்சன் ஓங் லோங் யாங் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

உட்லண்ட்ஸ் கிரெசண்டில் புளோக் 774ன் 13 ஆம் மாடியின் பொது நடைவழி நெடுகத் தொங்கவிடப்பட்டிருந்த தேசியக் கொடியைக் காலை 6 மணிக்கும் 6.15 மணிக்கும் இடையே அவர் தனது லைட்டரால் கொளுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனால், பக்கவாட்டில் இருந்த வேறு சில கொடிகளும் சேதமடைந்தன.

சம்பவம் குறித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12.40 மணிக்கு போலிசாருக்குத் தகவல் கிடைத்தது.

உட்லண்ட்ஸ் போலிஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் புலன்விசாரணை வழியாகச் சந்தேக நபரின் அடையாளத்தை உறுதி செய்த பின்னர் அவரைக் கைது செய்தனர்.