பிரதமர்: இன்னும் முன்னோக்கிக் காண்பதற்கு எவ்வளவோ உள்ளது

பிரதமர்: இன்னும் முன்னோக்கிக் காண்பதற்கு எவ்வளவோ உள்ளது

1 mins read
366c06e5-f326-4fae-a79d-520f9c4bbbe3
104 வயது திருவாட்டி சோவுடன் ( நடுவில்) பிரதமர் லீ சியன் லூங். (படம்: ஃபேஸ்புக்) -

சிங்கப்பூரின் பிரதமர் லீ சியன் லூங் தேசிய தினக் கொண்டாட்டத்தை டெக் கீ வட்டாரவாசிகளுடன் இன்று காலை தொடங்கினார். சிங்கப்பூரின் இருநூற்றாண்டுக் கொண்டாட்டத்துடன் கூடிய இவ்வாண்டின் தேசிய தினத்திற்கான தமது வாழ்த்துகளை அவர் ஃபேஸ்புக்கில் வெளியிட்டார்.

பிரதமர் லீ தேசிய தினம் குறித்து தமது ஃபேஸ்புக் பதிவில் கூறுகையில் "நீங்கள் எங்கிருந்தாலும் நீட்டிக்கப்பட்டுள்ள வாரயிறுதி நாட்களில் என்ன செய்வதாக இருந்தாலும் உங்கள் அன்புக்குரியவர்களுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன். நாம் எங்கிருந்து வந்தோம், இப்போது எங்கு இருக்கிறோம் போன்றவற்றைப் பற்றி சிந்தியுங்கள். ஒரு மக்களாகக் கொண்டாடுவதற்கு நமக்கு எவ்வளவோ உள்ளது. முன்னோக்கிக் காண்பதற்கு எவ்வளவோ உள்ளது," என்றார்.