தேசிய தினம், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய பொது விடுமுறைகளை முன்னிட்டு (இன்று முதல் திங்கட்கிழமை வரை) நீண்ட வாரயிறுதி கிடைத்துள்ளது.
இந்த நீண்ட வாரயிறுதியின்போது 880 மருந்தகங்கள் திறந்திருக்கும் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மருந்தகங்களுக்கான ஆக அண்மைய பட்டியலைப் பார்த்து அவை திறந்திருக்கும் நேரத்தை அறிந்துகொள்ளுமாறு பொதுமக்களுக்கு அமைச்சு தெரிவித்துள்ளது.
உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தாத நோயால் பாதிக்கப்பட்டால் மருந்தகங்களுக்கு அல்லது 24 மணி நேர மருந்தகங்களுக்குச் செல்லுமாறு அமைச்சு கூறியது. மூச்சுத்திணறல் போன்ற உயிருக்கு ஆபத்து உள்ள நிலை ஏற்படும் பட்சத்தில் மருத்துவமனைகளில் உள்ள விபத்து, அவசரகாலப் பிரிவுக்குச் செல்லுமாறு அமைச்சு தெரிவித்தது.

