மாறிவரும் ஆயுட்காலத்துக்கு ஏற்ப ஓய்வுகாலம் மாறவேண்டும்

மாறிவரும் ஆயுட்காலத்துக்கு ஏற்ப ஓய்வுகாலம் மாறவேண்டும்

1 mins read
ba19da92-4ce7-41d0-86f7-f7dcf0ca26f2
மக்களின் ஆயுட்காலத்துக்கு ஏற்ப அவர்களின் பதவி ஓய்வுகாலமும் நீட்டிக்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

அதிகரித்து வரும் சிங்கப்பூர் மக்களின் ஆயுட்காலத்துக்கு ஏற்ப அவர்களின் பதவி ஓய்வுக்காலமும் நீட்டிக்கப்பட வேண்டும் என்று கொள்கை ஆய்வுக் கழகம் பரிந்துரைத்திருக்கிறது.

மாறிவரும் பதவி ஓய்வுகாலம் மற்றும் மறு வேலைவாய்ப்பு வயது ஆகியவை தொடர்பிலான முத்தரப்புப் பணிக்குழு வெளியிடவிருக்கும் பரிந்துரைகளுக்கு முன்பாக கொள்கை ஆய்வுக் கழகம் தனது பரிந்துரையைத் தெரிவித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை கழகம் வெளியிட்ட அறிக்கையில், பதவி ஓய்வுகாலம் அதிகரித்து வரும் ஆயுட்காலத்துக்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும் என்று தெரிவித்தது.

'ஹேல்' எனப்படும் சுகாதாரத்துடன் சரிசெய்யப்பட்ட ஆயுட்காலம் எனும் அறிக்கை யுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் வரும் 2029ஆம் ஆண்டில் பதவி ஓய்வுகாலம் 74ஆக இருக்க வேண்டும். 'ஹேல்' அறிக்கையின்படி, பதவி ஒய்வு வயது 74.2.

இது தற்போதைய பதவி ஓய்வு வயதான 62ஐவிட 12 ஆண்டுகள் அதிகமாக உள்ளது. மறுவேலை வாய்ப்பு வயதான 67ஐவிட ஏழு ஆண்டுகள் அதிகம்.

பதவி ஓய்வு வயது வரும்வரை வயதைக் காரணம் காட்டி முதலாளிகள் ஊழியர்களை வேலை நிறுத்தம் செய்ய முடியாது. மேலும் மறுவேலை வாய்ப்பு வயது வரை பணி புரிய அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.

பதவி ஓய்வு வயதை உயர்த்துவது பற்றியும் மறுவேலை வாய்ப்பு வயதை உயர்த்துவது பற்றியும் விளக்கும் அறிக்கையை முதிய ஊழியர்கள் தொடர்பான முத்தரப்புப் பணிக்குழு அடுத்த மாதம் வெளியிடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.