சிங்கப்பூரில் இப்போதைக்கு புகைமூட்டம் இருக்காது

சிங்கப்பூரில் இப்போதைக்கு புகைமூட்டம் இருக்காது

1 mins read
1fb6274b-e666-4c35-ae74-ee47f02417d1
இம்மாதம் 6ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்த புகை மூட்டத்தின் தாக்கம். படம்: ஏஎஃப்பி -

சிங்கப்பூரில் நேற்றுக் காலை சிறிது நேரத்துக்குப் பல பகுதிகளில் மழை பெய்தது. தெற்கு பகுதியிலிருந்தும் தென்கிழக்கு பகுதியிலிருந்தும் காற்று வீசியது.

மேகமூட்டம் காரணமாக சுமத்ராவில் தென்பட்ட காட்டுத்தீ பகுதிகள் 68ல் இருந்து 36க்குக் குறைந்துள்ளது.

ரியாவ் பகுதியில் காணப்படும் காட்டுத்தீ மற்றும் புதர் தீ சம்பவங்கள் அணுக்கமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

நேற்று மாலை 5 மணி நிலவரப்படி, 24 மணிநேர காற்று மாசுக்குறிவீடு மிதமான நிலையில் 62-67 வரை இருந்தது.

இன்று பல பகுதிகளில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த சில நாட்களில், காற்று தென்கிழக்கு அல்லது தெற்கு திசையிலிருந்து வீசும்.

சுமத்ராவின் வானிலை பொதுவாக வறண்ட நிலையிலேயே இருக்கும்.

புகைமூட்டத்தின் தாக்கம் ஒருவரது சுகாதார நிலையைப் பொறுத்தும் எவ்வளவு நேரம் வெளிப்புற நடவடிக்கையில் ஒருவர் ஈடுபடுகிறார் என்பதையும் பொறுத்திருக்கிறது என்று தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது.

வெளிப்புற நடவடிக்கை களைக் குறைத் துக்கொண்டால் புகைமூட்டத்தால் ஏற்படும் சுகாதாரக் கேடுகளைக் குறைத்துக்கொள்ளலாம்.