'குர்பான்' இறைச்சி விநியோகம்

1 mins read
fb6f286e-57e5-460f-b98f-60dcb1940c7b
மூத்த நாடாளுமன்றச் செயலாளர் முகம்மது ஃபைசால் இப்ராஹிம் நேற்று இறைச்சிப் பொட்டலங்களை விநியோகித்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஜாமியா சிங்கப்பூர் அமைப்பிட மிருந்து நேற்று சுமார் நூறு பேர் 'குர்பான்' இறைச்சியைப் பெற்றுக் கொண்டனர்.

ஹஜ்ஜுப் பெருநாளையொட்டி குர்பான் கடமை நிறைவேற்றப்பட்டு பின்னர் ஏழை, எளியோருக்கு இறைச்சி விநியோகிக்கப்பட்டது.

இதில் முஸ்லிம் தொண்டு நிறுவனமான ஜாமியா சிங்கப்பூர், ஜாமியா மறுவாழ்வு இல்லம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் பலன் அடைந்தனர்.

நன்கொடையாளர்களும் சிங்கப்பூரில் உள்ள ஐக்கிய அரபு சிற்றரசின் தூதரகத்தினரும் குர்பான் இறைச்சிக்கு நன்கொடை வழங்கியிருந்தனர்.

ஐக்கிய அரபு சிற்றரசின் தூதரகம் மட்டும் இருபது ஆடுகளை வாங்கியிருந்தது.

இறைச்சி விநியோகிக்கும் நிகழ்ச்சியில் இணைப் பேராசிரியரும் கல்வி, சமுதாய குடும்ப மேம்பாட்டு அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளருமான டாக்டர் முகம்மது ஃபைசால் இப்ராஹிம் கலந்து கொண்டார்.

இவ்வாண்டு குர்பான் சடங்கு தீவு முழுவதும் உள்ள 26 பள்ளி வாசல்களில் நடைபெற்றது.

இதற்காக ஆஸ்திரே லியாவிலிருந்து கடந்த வாரம் 3,700 ஆடுகள் தருவிக்கப்பட்டன.