சாலை வழிகாட்டியாக மாறிய பௌத்த தொண்டர்கள்

சாலை வழிகாட்டியாக மாறிய பௌத்த தொண்டர்கள்

1 mins read
43eab3a9-bd1b-4f42-ba50-f0af2e418ada
சாலை வழிகாட்டியாக மாறி தொண்டூழியத்தில் ஈடுபட்ட 'ஷின்னியோ என் சிங்கப்பூர்' அமைப்பின் தொண்டர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஹஜ்ஜுப் பெருநாளையொட்டி யூனோசில் உள்ள அப்துல் ரசாக் பள்ளிவாசலில் நேற்றுக் காலை சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

இதில் பங்கேற்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வந்திருந்ததால் அந்த வட்டாரமே சுறுசுறுப்பாகக் காணப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில் யூனோஸ் பள்ளிவாசலுக்கு அருகே உள்ள பௌத்த அமைப்பான 'ஷின்யோ-என் சிங்கப்பூர்' குழுவினர், சாலை வழியாட்டியாக மாறி தொழுகைக்குவந்தவர்களுக்கு இடவசதியை ஏற்படுத்திக் கொடுத்தனர்.

ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நாளன்று ஷின்யோ-என் சிங்கப்பூரின் குழுவினர் தொண்டூழியம் புரிவது இதுவே முதல் முறை.

இதற்கிடையே அப்துல் ரசாக் பள்ளிவாசலில் ஆண்டுக்கு ஆண்டு சிறப்புத் தொழுகைகள் அதிகரித்து வருவதாகக் கூறிய அந்தப் பள்ளிவாசலின் செயலாளர் சையது சாலே, நெரிசல் காரணமாக தொழுகையாளர்கள் பள்ளிவாசலுக்குள் வர முடியவில்லை", என்றார். இதனால் தொழுகைகள் தாழ்வாரங்களில் அல்லது பள்ளிவாசலுக்கு வெளியே உள்ள சாலையில் நடைபெறுகிறது. ஆனால் இது, பாதுகாப்பானது அல்ல. இதனால் சாலையின் ஒரு பகுதியை மூட அனுமதி கோரியிருந்தோம் என்றார் அவர்.

கெம்பாங்கான்-சாய் சீயில் நடைபெற்ற இன, சமய நன்னம்பிக்கை கூட்டத்தின்போது சாலை வழியாட்டியாக பணியாற்ற ஷின்யோ-என் தொண்டூழியர்கள் விருப்பம் தெரி வித்ததாகவும் அவர் சொன்னார்.